நாட்டு சர்க்கரை கருப்பட்டி மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள்

கருப்பட்டி
கருப்பட்டி

சீனீ எனப்படுகிற வெள்ளை சர்க்கரையை, உணவகங்கள், இனிப்பகங்கள் மற்றும் வீடுகளில் பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறோம், இந்த வெள்ளை சீனியால் நமக்கு ஏற்படும் உபாதைகளையும், தீமைகளையும் நாம் எண்ணி பார்ப்பதில்லை. அதற்கு மாற்றாக நம் முன்னோர்கள் கண்டறிந்த, கருப்பட்டி என்றழைக்கப்படுகிற நாட்டு சர்க்கரையின் மகிமையை நாம் அறிந்து கொள்வது கட்டாயம். கடந்த நூறு ஆண்டுகளுக்குள், நம் வாழ்க்கையில் கலந்துவிட்ட வெள்ளை சர்க்கரை நமக்கு கொண்டு வந்துள்ள தீமைகளும், பாதிப்புகளும் ஏராளம். தற்காலத்தில் கிடைக்கும் அல்லது உற்பத்தியாகவும் அனைத்து பொருட்களும் தரமற்றது என நாம் கூறவும் இயலாது, அதனால் அறிவியல் பூர்வமாக நாம் அலசுவது முக்கியம், இந்த கட்டுரை அந்த வகையில் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.

சர்க்கரை
சர்க்கரை

கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை எப்படி எடுக்கப்படுகிறது ?

தென்னை மரம், பனை மரம், கரும்பு மற்றும் ஈச்சமரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் மூலம் கருப்பட்டி என்கிற நாட்டு சர்க்கரை எடுக்கப்படுகிறது. பதநீரை வடிகட்டி, காய்ச்சி கருப்பட்டி செய்யப்படுகிறது. கருப்பட்டி செய்யப்படும் போது, நிறத்தை வெண்மையாக்க அல்லது இலகுவாக மாற்ற எந்த ஒரு வேதியல் பொருளும் சேர்க்கப்படுவதில்லை, அப்படி சேர்த்தால் அது உண்மையான கருப்பட்டி இல்லை. நாம் கடைகளில் இரண்டு விதமான வெல்லத்தை பார்த்திருப்போம், ஒன்று மிக கருமை நிறம் இன்னொன்று சந்தன நிறம், இதில் எது உண்மையானது என்பதை கடைக்காரர் நன்கு அறிவார். மக்கள் நிறத்தை மறுத்து உண்மையான கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரையை தேடி சென்றால் இவர்களும் தானாக மாறிவிடுவர்.

நாட்டுசர்கரையில் உள்ள சத்துக்கள் / விட்டமின்கள்

சத்துக்கள் / விட்டமின்கள் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை வெள்ளை சர்க்கரை அளவு
இரும்பு சத்து 12 0 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 40 1 மில்லி கிராம்
கால்சியம் அல்லது சுண்ணாம்பு சத்து 80 11.4 மில்லி கிராம்

 

வெள்ளை சர்க்கரை அல்லது சீனீயை, நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியுடன்ஒப்பிட்டு பாக்கும் போது மருத்துவரீதியாக என்னென்ன நன்மைகள் என்பதை காண்போம். நாட்டு சர்க்கரையில் இரும்புசத்து, பாஸ்பரஸ் எனப்படுகிற எரிச்சது, மற்றும் சுண்ணாம்பு சத்து ( கால்சியம் ) என்பது மிகப்பல மடங்கு அதிகள் உள்ளது என்பதை அறிவியல் சோதனைகள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் மனிதன் வாழ்க்கைக்கு மிகப்பபெரிய உயிர்நாடி, உதாரணமாக பாஸ்பரஸ் மூளை வளர்ச்சிக்கும், கால்சியம் எலும்புக்கும், இரும்பு சத்து ரத்தத்தில் ஹீமோகிளோபின் உற்பத்திக்கும் மிக உகந்தது.

நாட்டு சர்க்கரையின் மற்ற பலன்கள்

  1. இயற்கை முறையில் கிடைக்கும் நாட்டு சர்க்கரை உடலில் நோயை உண்டு செய்யும் அமிலத்தை வெளியேற்றுகிறது.
  2. நாட்டு சர்க்கரையில் உள்ள கனிம சத்துக்கள் எளிதில் கரையக்கூடிய சத்துக்களானதால், உடனடியாக ஜீரனமாகும்
  3.  கரும்பு சாரையும், வெல்லத்தையும் உணவில் சேர்க்கும் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த மக்கள் கேன்சர் போன்ற உபாதைகளுக்கு ஆளானதில்லை.

நாட்டு சர்க்கரை எங்கு கிடைக்கும் ? எவ்வளவு விலை ? எந்த உணவில் உபயோகப்படுத்தலாம் ?

நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும், குறிப்பிட்ட மளிகை கிடைகளிலும், ஊர்களில் வார சந்தை நாட்களிலும் கிடைக்கும். சமீப காலமாக அனைத்து சூப்பர்மார்கெட்டிலும், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரையை பார்க்க முடிகிறது. பகுதிக்கு ஏற்றார் போல் இதன் விலை ஒரு கிலோவிற்கு 70 ருபாய் முதல் 120 ருபாய் வரை விற்கப்படுகிறது. நாம் வெள்ளை சர்க்கரை உபயோகப்படுத்தும் அனைத்து இடங்களிலும் நாட்டு சர்க்கரையை உபயோகப்படுத்தலாம், மேலும் இனிப்பு பலகாரங்கள் செய்யப்படும் போதும், சீனீ சர்க்கரையை தவிர்த்து நாட்டு சர்க்கரையை உபயோகிப்பது நலம்.

உணவு விஷயத்தில் நாம் இயற்கையை மீறி எவ்வளவு விலகி செல்கிறோமோ, அதே அளவு நோய்களுக்கு அருகில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் !

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*